மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளம் பகுதியில் ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர் அழகியமணவாளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கபிள்ளை என்பவர் மகன் தங்கதுரை (வயது 37) என்பதும், விவசாயியான இவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.