ரத்ததான முகாம் நடத்தியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்

0 460
Stalin trichy visit

உலக ரத்ததான கொடையாளர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றக் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி தேவைக்காக அதிகமான ரத்ததான முகாம் நடத்தியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி பிஷப் கல்லூரி வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிக ரத்ததான முகாம் நடத்தியமைக்காக திருச்சி மாநகர் DYFI ரத்ததான கழகத்திற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பாராட்டுச் சான்றிதழை மாவட்ட திட்ட இயக்குனர் டாக்டர் மணிவண்ணன் வழங்க அதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் அலுவலர் டாக்டர் வளர்மதி, ரத்ததான வங்கியின் ஆற்றுனர் பாலச்சந்தர் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் முகில், சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.