திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது

0 193
Stalin trichy visit

திருச்சி ஆக 13 – திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் பாஷா (வயது 33) இவர் கடந்த மே மாதம் 28ந்தேதி மதுரை ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.பிறகு மீண்டும் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதுகுறித்து ஹக்கீம் பாஷா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.இதேபோன்று சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 46 )இவர் தபால் நிலையம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியே சென்றார்.பிறகு மீண்டும் வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனம் திருட்டுப் போய்விட்டது இது தொடர்பாக நடராஜன் கோட்டை போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.இவரைப் பார்த்த போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் மகன் அருள் ஆனந்த் (வயது 24 )என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.

இதையடுத்து அருளானந்த்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது அவர் இருசக்கர வாகனத்தை திருடும் நபர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹக்கீம் பாஷா, நடராஜ் ஆகியோரிடம் திருடிய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அருளானந்தத்தை கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.