திருவரங்கத்தில் பெண்ணிடம் மூன்றரை பவுன் நகைப்பறித்த மர்ம நபர்
திருச்சி ஆக12 -திருவரங்கத்தை சேர்ந்தவர் சுகுமார் இவரது மனைவி சித்ரா (வயது 43) இவர் நேற்று முன்தினம் திருவரங்கம் வீரேஸ்வரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்பொழுது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி திடீரென்று சித்ரா அருகில் வந்து அவர் கழுத்தில் இருந்த 3 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து சித்ரா திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.