மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

0 156
Stalin trichy visit

திருச்சி ஆக13 – திருச்சி திருவரங்கம் பகுதியை சேர்ந்தவர்
பாஸ்கரன் இவரது மகன் பிரபு (வயது 38)இவர் தனது தந்தையுடன் திருவரங்கம் ஆர் எஸ் சாலை பகுதியில் உள்ள காவடிக்கார தெருவில் வேலைக்கு சென்று இருந்தார். இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த லைனில் பிரபு எதிர்பாராதமாக கை வைத்து விட்டார்.இந்த சம்பவத்தில் பிரபு மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் பிரபுவை திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் ஏற்கனவே பிரபு இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

லாரி டிரைவர் மயங்கி விழுந்து சாவு

திருச்சி அதவத்தூர் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி ரெங்கன் (வயது 67) இவர் திருச்சி பாலக்கரை குட்செட் ரோடு பகுதியில் உள்ள லாரி ஷட்டில் தனியார் மில்லில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.கடந்த 14 ந்தேதி மில்லில் உள்ள நாற்காலியில் கஸ்தூரி ரெங்கன் அமர்ந்திருந்தார். இந்நிலையில் திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் கஸ்தூரி ரெங்கன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஸ்தூரி ரெங்கன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.