மத்திய சிறை வளாக பகுதியில் வளாகத்தில் செல்போன்கள், சிம், சார்ஜர்கள் பறிமுதல்

0 209
Stalin trichy visit

திருச்சி ஆக13 -திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் கடந்த 11ஆம் தேதி சிறப்பு முகாம் சிறையில் இருந்த 25 வங்கதேச கைதிகளை சேலம், ஆத்தூரில் உள்ள சிறப்பு முகாமிற்கு மாற்றுவதற்காக வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து வேனில் ஏற்ற தயாராகிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் மார்க்ரேட் மேரி கைதிகளின் உடமைகளை சோதனை செய்தார். அப்பொழுது அங்குள்ள மரத்தின் அடியில் இரண்டு செல்போன்கள் ஐந்து சிம் கார்டுகள் இரண்டு சார்ஜர்,செல்போன் உபகரணங்கள் கிடந்தன.இதனை சிறைத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் இந்த சம்பவம்அங்குள்ள கைதிகளிடம் விசாரணை செய்தபோது அவர்கள் எங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர். இது குறித்து அப்போது பாதுகாப்பு பணியில் இருந்தபெரம்பலூர் இன்ஸ்பெக்டர் மார்க்ரேட் மேரி கேகே நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.