மோட்டார் சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

0 282
Stalin trichy visit

திருச்சி ஆக. 21 திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மரிய செல்வம் (வயது 45 )கூலித் தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் மறுநாள் எழுந்து பார்த்தபோது மர்ம ஆசாமிகள் அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர்.

பின்னர் இது குறித்து எடமலை பட்டிப்புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 17 வயது மற்றும் 16 வயது உடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் கருமண்டபம் குளத்து கரை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 19 )ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். கைதான சந்தோஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். சிறுவர்கள் இரண்டு பேரையும் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

Leave A Reply

Your email address will not be published.