திருமணம் செய்வதாக கூறி இளம் பெண் சீரழிப்பு: மகளிர் போலீசார் விசாரணை

0 145
Stalin trichy visit

திருச்சி ஆக.21 திருச்சி திருவரங்கம் பகுதியில் பிரபல நிறுவனத்தின் மருந்து கடை இயங்கி வருகிறது .இதில் திருச்சி சண்முகா நகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (வயது 32) என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் அதே மருந்து கடையில் பணியாற்றினார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் காதலாக மாறியது.

அப்போது உதயகுமார் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியுடன் விவாகரத்து ஆகிவிட்டதாகவும் ,குழந்தைகளை தானே பராமரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி அந்த இளம்பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றினார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வ மலர் வழக்கு பதிவு செய்து, உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.