ஸ்ரீரங்கத்தில் தீ விபத்து : 6 வீடுகள் எரிந்து சேதம்
திருச்சி ஆக.21 திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நரியன் தெருவில் ஆறு வீடுகள் எரிந்து முழுவதும் சாம்பலானது. இதில் பீரோ, கட்டில், டூவீலர் என பல லட்சம் மதிப்பிலான பொருட்களும் சேதமானது. தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தீ விபத்திற்கு காரணம் கேஸ் சிலிண்டர் கசிவு என கூறப்படுகிறது. இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.