அரசுப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் கூடல் விழா
திருச்சி, ஆக.23 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் இலக்கிய மன்றம் தமிழ்க் கூடல் விழா நேற்று நடைபெற்றது.
புள்ளம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் இலக்கிய மன்றம் தமிழ்க் கூடல் விழா தலைமையாசிரியர் முனைவர் மா.சரவணவேல் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாணவர் பருவம் மாண்புடைப் பருவம் – என்ற தலைப்பில்
முனைவர் அர. செங்கொடி சிறப்புரை நிகழ்த்தினார். அவரின் தமிழ்ப் புலமையுடன் அமைந்த செம்மாந்த சிறப்புரை மாணவர்களிடத்தில் மகத்தான மாற்றத்தை விதைத்துள்ளது.
இந்நிகழ்வில் முதுகலை ஆசிரியர் முனைவர் வீ.நதியா வரவேற்புரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர்கள் த .அனுராதா, பெ.சுமதி, அ. சோபித் ரீட்டா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக பட்டதாரி ஆசிரியர் ச.கயல்விழி நன்றி கூறினார்.