பூவாளூர் பேரூராட்சியில் புதிய கட்டிடங்கள் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி, ஆக.23 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் முதல்நிலை பேரூராட்சிக்கு ரூ 1 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலக கட்டிடம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சமுதாய கூடத்தினை அமைச்சர் கே.என். நேரு நேற்று திறந்து வைத்தார்.
லால்குடிஅருகே பூவாளூர் புதிய பேருராட்சி அலுவலகம் கட்டுவதற்கு மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ 1 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், தென்கால் பகுதியில் அயோத்திதாசர் பண்டிதர் குடியிறுப்புகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கிடு செய்து அதற்காண பணிகள் நடைபெற்று வந்தது.
பணிகள் முடிந்து அதற்கான திறப்பு விழா நடைப்பெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரநாத் சிங், பேருராட்சிகளின் செயற் பொறியாளர் சுப்பிரமணியன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர்ஸ்ரீதர்,பேரூராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி பால்ராஜ், செயல் அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே .என். நேரு கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட சமுதாயக்கூடம் மற்றும் பேரூராட்சி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். மேலும் கட்டடத்தை பார்வையிட்டு பொதுமக்களின் வசதிக்காக கழிப்பறை அமைத்து தர அதிகாரிகளிடமும் ஆலோசனை வழங்கினார்.
விழாவில் பேரூராட்சி உதவி பொறியாளர் ராதா, இளநிலை பொறியாளர் குரு ராஜாமணி,செயல் அலுவலர்கள் கல்லக்குடி அசோகன், சமயபுரம் கணேசன், பொன்னம்பட்டி அழகேந்திரன்,தாசில்தார் ஞானமிர்தம், மற்றும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கோமதி முருகேசன்,லால்குடி நகர் மன்ற தலைவர் துரை மாணிக்கம்,லால்குடி நகராட்சி ஆணையர் குமார், பூவாளூர் திமுக நகர செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் லால்குடி சக்திவேல் ,சண்முகநாதன், ஒப்பந்தக்காரர் மணிவண்ணன் ராஜேந்திரன்,
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.