உய்யக்கொண்டான் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
திருச்சி ஆக25 – திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் திருப்பஞ்சலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தையன் இவரது மகன் சூர்யா (வயது 13)இவர் தற்போது உறையூர் வைக்கேல் கார தெருவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது நண்பருடன் ராஜா காலனி மெயின் ரோடு அருகில் உள்ள உய்யக் கொண்டான் ஆற்றில் குளிக்க சென்று உள்ளார். அப்பொழுது சூர்யா நீச்சல் தெரியாமல் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி இறந்து போன சூர்யாவின் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செசன்ஸ் கோர்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து போன சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.