போதை மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது
திருச்சி ஆக 25- திருச்சி உறையூர் முஸ்லிம் தெரு எம்ஜிஆர் சிலை அருகில் போதை மாத்திரை விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதே இடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் நளினி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர்.அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த அசின் பாஷா (வயது 26) முகமது இப்ரான் (வயது 21)என்பது தெரிய வந்தது. இவர்கள் இரண்டு பேரும் போதை மாத்திரையை
விற்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.