திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் வருகை

0 228
Stalin trichy visit

திருச்சி ஆக 25  திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 3 ந்தேதி காலை நடைபெற உள்ளது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 3 ந்தேதி காலை டெல்லியில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் பகல் 12.30 மணியளவில் வந்து இறங்குகிறார்.

அங்கு மதிய உணவிற்கு பின்னர் 2.30 மணி முதல் 3.30 மணி வரை நடை பெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி, மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் கோல்டு மெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

திருவரங்கம் கோவிலில் சாமி கும்பிடுகிறார்

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் திருவரங்கம் புறப்பட்டு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கு அமைக்கப்படும் பிரத்யேக ஹெலிபேடு தளத்தில் இறங்குகிறார். பின்னர் காரில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் காரில் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியின் திருச்சி மற்றும் திருவாரூர் வருகையையொட்டி திருச்சி மற்றும் திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.