காந்தி அஸ்திமண்டபத்தில் மலர்தூவி மரியாதை

0 332
Stalin trichy visit

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்டவரும், அகிம்சை கோட்பாடுகளை வித்திட்டவருமான தேசத்தந்தை, மகாத்மா என அனைவராலும் அழைக்கப்படும் அண்ணல் காந்தியடிகளின் 153வது பிறந்ததினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள காந்திஜி உடல் தகனம் செய்யப்பட்ட அஸ்தியின் ஒருபகுதி இங்கு வைக்கப்பட்டு மண்டபம் எழுப்பப்பட்டு உள்ளது.

இந்த அஸ்தி மண்டபத்திற்கு திருச்சி சேவாசங்கம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், திரளானோர் காந்திஜியின் அஸ்திமண்டபத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சர்வமத பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அண்ணல் காந்தியடிகளின் துதிபாடல்களை பாடியும், காந்திஜியின் கொள்கையின்படி அறவழியில் செல்வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.