வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

0 346
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் சந்துரு(வயது 21). இவர் டெக்கரேஷன் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சந்துரு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்துருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்  இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.