அன்பில் பொய்யாமொழி நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம்

0 186
Stalin trichy visit

திருச்சி, ஆக.28  அன்பில் பொய்யாமொழி 26 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி நினைவு நாளையொட்டி திருச்சி மாவட்ட  செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
கல்லுக்குழி விழி இழந்தோர் பள்ளியில் கலைஞர் நகர் பகுதி கழகம் சார்பாகவும்,
மலைக்கோட்டை பகுதி கழகம் அன்னதான சமாஜத்திலும்
மாநகரக் கழகம் சார்பாக நகரப்புற வீடற்றோருக்கான தங்கும் இல்லத்திலும் காலை உணவு வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், பாபு, மாநகரக் கழகம் பகுதி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.