எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம்
திருச்சி, செப்.8 தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க உதவியுடன் (TANSACS) மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு (DAPCU) மேற்பார்வையில் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) ஒருங்கிணைப்பில் சமயபுரம் பகுதியில் தீவிர விழிப்புணர்வு முகாம் (Intensive IEC Campaign 2025) நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி சமயபுரம் கண்ணனூர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சரவணன் முன்னிலையில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டுஅலகு, மாவட்ட திட்ட மேலாளர் விமல் ஆரோக்கியமேரி, திருச்சி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ICTC மேற்பார்வையாளர் புஷ்பலதா மேற்பார்வையில் சமயபுரம் கண்ணனூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் துப்புரவு பணியாளர்கள், காவல்துறை பணியாளர்கள், ஆட்டோ&டாக்ஸி ஓட்டுநர்கள் , அதிக ஆபத்துடைய இலக்கு நபர்கள், பூக்கடை. தரைக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு இலவசமாக ரத்தம் அழுத்தம் அளவு , சர்க்கரை அளவு, எச்.ஐ.வி, வீ.டீ.ஆர்.எல், மஞ்சள் காமாலை மற்றும் காச நோய் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பரிசோதனை செய்ய மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை ஆலோசகர் கோமதி, ஓமந்தூர் அரசு மருத்துவமனைஆலோசகர் பாபு, சிறுகாம்பூர் அரசு மருத்துவமனை ஆலோசகர் உதயா . ஆய்வக நுட்புனர்கள் , நடமாடும் HIV பரிசோதனை வாகன ஊர்தி ஆலோசகர் மற்றும் பணியாளர்கள், காச நோய் தடுப்பு திட்ட பணியாளர்கள் மக்கள் மேம்பாட்டு வினையக பணியாளர்கள், மற்றும் நிலா டிரஸ்ட் LWS பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியினை திட்ட மேலாளர்.(PDI) முத்துகுமார் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.