விவசாயிகளுக்கு உழவர் பெருந்திரள் கூட்டம்
திருச்சி, செப்.23 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை கிராமத்தில்
அட்மா திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு உழவர் பெருந்திரள் கூட்டம் லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சத்தியப்பிரியா தலைமையில் நடைபெற்றது.
இதில் கோடை உழவு,பசுந்தாள் உர பயிர் தக்கைபூண்டு விதைப்பு, சம்பா நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்,பாரத பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டம்,நில உடமை பதிவு செய்தல் அவசியம் மற்றும் பயன்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
உயிர் உரங்கள் பயன்படுத்துதல், இயற்கை வேளாண்மை, பாதுகாப்பாக பயிர் பாதுகாப்பு மருந்துகள் கையாளும் முறைகள் , களைகொல்லி பயன்படுத்தும் முறைகள் பற்றியும் , உழவன் செயலி பயன்படுத்துதல் மண்வள அட்டை திட்டத்தின் கீழ் மண் மாதிரி அடிப்படையில் உர மேலாண்மை செய்தல் ,நெல் வயலில் பாசி கட்டுப்பாடு, ஒட்டுண்ணி அட்டை கட்டுதல்,இன கவர்ச்சி பொறி வைத்து கட்டுப்பாடு செய்தல் செயல் விளக்கமாக காண்பிக்க பட்டது. வேளாண்மைத்துறை சார்பில் இடுபொருள்,நெல் இரகங்கள்,உயிர் உரங்கள்,பயிர் பூஸ்டர்கள் பயன்படுத்திட கேட்டுகொண்டார்.
அதன் பின் விதை சான்று அலுவலர் வேல்முருகன் பேசுகையில் லால்குடி வட்டாரத்தில் விதைபண்ணை அமைத்து வயலில் பராமரிப்பு செய்யும் முறைகள்,சான்று அட்டை வகைகள் கலவன் நீக்குதல்,தரமான விதை உற்பத்தி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் வர வேண்டும் என கூறினார். மேலும் சம்பா நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
உழவர்கள் திரள் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு உதவி வேளாண்மை அலுவலர் திரு.எடிசன் விவசாயிகள் பி எம் கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற தங்களது சுய விபரங்களை புதுப்பித்திடவும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து க்கொள்ள கூறினார்.இதற்கான ஏற்பாட்டினை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரிசெல்வன் , உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக், ஆகியோர் செய்து இருந்தனர்.
இந்த குழு கூட்டத்தில் கலந்துகொண்ட 100 மேற்பட்ட செம்பரை கிராம முன்னோடி விவசாயிகள் அனைவருக்கும் தொழில்நுட்ப கையேடு,துண்டு பிரசுரம்,ஊக்க தொகை,மதிய உணவு வழங்கப்பட்டது. வேளாண்மைத்துறை அட்மா திட்ட திட்டத்தின் கீழ் உழவர் பெருந்திரள் கூட்டம் நடத்திய லால்குடி வட்டார வேளாண்மை துறைக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்..