மணப்பாறை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கோரி மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மனு
திருச்சி, செப். 22 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPI(ML) மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் நகர மகளிர அணி சார்பாகவும் மணப்பாறை
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கபடும் நோயாளிகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக வழங்கபடும் உணவுகளை
வெளியே வர வைத்து வரிசையில் நிக்க வைத்து உணவு கொடுப்பதால் நோயாளிகள் அவதிபடும் நிலை ஏற்படுகிறது உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் தலையிட்டு நோயாளிகள் இருக்கும் வார்டுகளிலயே உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மற்றும் இரத்த பரிசோதனை நிலையம் மற்றும் பணியாளர்கள் குறைவாக இருப்பதால் நோயாளிகள் வரிசையில் நீண்ட நேரம் நிற்பதால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் இரத்த பரிசோதனை நிலையத்தையும் பணியாளர்களையும் அதிகபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,
நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் இடத்தை அதிகபடுத்த வேண்டும் அது மட்டுமல்லாமல் மாதாந்திர மருந்து வாங்குபவர்களுக்கு தனி வரிசை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ(எம்.எல்) நகர செயலாளர் P.பாலு தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் நகர மகளிர் அணி அமைப்பாளர் இரா, தீபா முன்னிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கபட்டது
மனுவை பெற்றுகொண்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் மனு அளிப்பில் CPI(ML) மாவட்டகுழு உறுப்பினர்கள் M.தங்கராஜ், ,இளையராஜா
.B.பாலகுமரன், நகரகுழு உறுப்பினர்கள் A,ஷாஜஹான், P. சொக்கலிங்கம், T,அறிவழகன்
மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.