கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

0 595
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி ஸ்டாலின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா. கணவரை பிரிந்து வாழும் இவருக்கு 4 மகள், ஒரு மகன் உள்ளார். 3வது மகள் சவித்தா(வயது 19). வீட்டில் இருந்த அவர் நேற்று முன்தினம் மாலையில் இருந்து காணவில்லை. உடனே அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வனிதா தனது மகளை காணவில்லை என்பது தொடர்பாக துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றார். அப்போது அவரது செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்பை எடுத்ததும் அதே இடத்தில் கதறிக் கொண்டு ஓடினார். இதைப்பார்த்த போலீசார் என்னவென்று கேட்டதோடு முத்துக்குளம் என்ற இடத்திற்கு விரைந்து சென்றபோது இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த வனிதா மற்றும் அவரது பிள்ளைகள் உடலைப் பார்த்து கதறி அழுதனர். மரத்தில் தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்த இளம்பெண் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

அதில் தன்னுடைய சாவுக்கு காரணம் பெண் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் தான் என் அண்ணியிடம் என்னை பற்றி தவறாக செல்லி இருவரையும் பிரித்து வைத்து விட்டதோடு, ஒரு ஆணின் பெயரை எழுதி அவரை காதலிக்க வற்புறுத்தினார் என்று தெரிவித்திருந்தார். அதன்படி அந்த கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.