கத்தியை காட்டி செல்போன் பறித்த 3 பேர் கைது

0 711
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் நேற்று முன்தினம் அடையவளஞ்சான் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் பாலசந்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து பாலச்சந்தர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து பாலசந்தரிடம் செல்போனை பறித்து சென்ற சிங்கர் கோவில் தெருவை சேர்ந்த மாதேஸ்வரன் (19), ராமச்சந்திரன் (21) மற்றும் 18 வயதுடைய வாலிபரை கைது செய்தனர். மேலும் நவநீதகிருஷ்ணன் என்பதை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.