த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரப் பயணம்: டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

0 189
Stalin trichy visit

திருச்சி, செப். 13 திருச்சி மரக்கடையில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அக்கட்சியின் தொண்டர்கள் டி.வி.எஸ். டோல்கேட் திரண்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கடந்தாண்டு அரசியல் கட்சி தொடங்கி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தினார். கட்சி தொடங்கி ஓராண்டான நிலையில் கடந்த மாதம் மதுரை இரண்டாவது மாநாட்டை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து பிரச்சாரப்பயணத்தை தொடங்கிறார். அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் இருந்து தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறார். இந்த பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்க அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து அங்கிருந்து வாகனம் மூலம் பிரச்சாரப் பகுதியை அடைகிறார். இதையடுத்து அவர் செல்லும் வழியில் த.வெ.க. தொண்டர்கள் திரண்டு உள்ளனர். இதனால் மாநகரில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனயொட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.