அதிமுகவை பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி : ஜவாஹிருல்லா பேச்சு
திருச்சி, செப். 13 திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மமக துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC, கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களது தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வாழ்வுரிமை மாநாட்டில் அவர் கலந்து கொண்ட போது நான் மிகப்பெரிய தவறை செய்து விட்டேன் அதற்காக நான் மன்னிப்பு கேட்கின்றேன். இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று மாநாட்டில் சூலுரைத்தார். அந்த பாஜக உடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டு அடகு வைத்து விட்டார் என்று சொன்னால் மிகை ஆகாது.
இதை வேறு வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக ஐசியூவில் இருக்கிறது என சரியான முறையில் பேசி இருக்கிறார்.
அதிமுக ஐசியூவில் இருக்கிறது என்று குறிப்பிட்டார். பழனிச்சாமி ஐசியூவில் இருக்கிறார் என்று கூறவில்லை. அதிமுக ஐசியூவில் தான் இருக்கின்றது அதற்கு எந்த சந்தேகமும் இல்லை.
காங்கிரஸ் ஆக இருக்கட்டும், பாஜகவா இருக்கட்டும், போயஸ் தோட்டத்தை தேடி வந்தனர் ஆனால் இன்று மோடியை தேடி செல்லுகின்ற நிலையில் அன்றைய அதிமுக இல்லை.
67 ஆம் திராவிடர் கழகம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலங்களில் ஒன்றிய அரசுக்கு மாநில அரசை அடகு வைக்கும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
2023ம் ஆண்டு முதல் மணிப்பூரில் கலவரம் பற்றி எரிகிறது உடனே பிரதமர் அங்கு சென்று இருக்க வேண்டும் ஆனால் செல்லவில்லை அது தொடர்பாக ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. இரு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு இலக்காக்கப்பட்டு பிறகுதான் கண்டன அறிக்கை மோடியிடமிருந்து வருகிறது. தற்போது மணிப்பூருக்கு செல்ல வேண்டிய ஆழ்ந்த நித்திரையில் இருந்து விழித்திருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் இன் இரண்டாம் கட்ட தலைவர் கோல்வாக்கர். அவர் எழுதிய புத்தகத்தில் மாநிலங்களே இருக்கக் கூடாது என எழுதி இருக்கிறார்.
ஆர் எஸ் எஸ்ஸின் நூற்றாண்டில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் நோக்கில் பாஜக அங்குலம் அங்குலமாக சென்று கொண்டிருக்கிறது.
ராகுல் காந்தி கேட்கக்கூடிய ஆணித்தரமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் நரேந்திர மோடியும் அவரை சார்ந்தவர்களும் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
கடந்த நாலரை ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற கொண்டிருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு வீடுகளுக்கும் பலன் அளிக்கக்கூடிய ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பதை மறந்து விடாதீர்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து பொது செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது . ஊடகவியலாளர் செந்தில் வேல் தமிழ் கேள்வி. தமுமுக மாநில பொருளாளர் N.ஷபியுல்லாஹ்கான் தமுமுக மகளீர் பேரவை மாநில ஷான் ரானி ஆலிமா ஆகியோர் மாநாடு தீர்மானங்களை விளக்கி உரையாற்றினர்
பொது கூட்டத்தில் தலைமை பிரதிநிதி MSM சுல்தான், வழ நூர்தீன், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் முகமது ரபீக், IT WING மாநில துணை செயலாளர் நஜீர் தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர் மமக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம்,அஷ்ரப் அலி தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா , இலியாஸ், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், காஜா மொய்தீன் மாவட்ட துணை செயலாளர்கள் பகுதி நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் சமூக நல ஆர்வலர்கள், ஜமாத் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்