வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்? த.வெ.க. தலைவர் விஜய் கேள்வி

0 217
Stalin trichy visit

திருச்சி, செப்.13 நீட்தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.
த.வெக தலைவர் விஜய்யின் பிரச்சாரண பயணம் திருச்சியில் இன்று தொடங்கியது.

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து 15 நிமிடங்களில் மரக்கடை பகுதிக்கு வரவேண்டிய விஜய் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மற்றும் வாகனங்களுடன் ஊர்வலமாக 5 மணிநேர பயணத்துக்கு பிறகு பிரச்சார பகுதியான மரக்கடைக்கு வந்தார்.

அப்போது கூடியிருந்து தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுகையில், அரசர்கள் போருக்கு செல்வதற்கு முன் குலதெய்வத்தை வணங்குவது போன்று அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனநாயகக் போருக்கு முன்னதாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனையாக அமையும், அண்ணா முதலில் தேர்தலில் நின்றது திருச்சியில்தான், எம்.ஜி.ஆர் முதல் மாநாடும் இங்குதான் நடத்தினார்.

கொள்கை தலைவர் பெரியார் வாழ்ந்த கொள்கை உள்ள மண் இது. நீட்தேர்வையும், மாணவர்களின் கல்விக் கடனையும் ரத்து செய்வோம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் நலப்பணியாளர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இலவச பேருந்து திட்டத்தை அறிவித்து விட்டு ஓசி என மக்களை அவமானப்படுத்துகிறார்கள். மகளிர் உதவித் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை. கல்வி, மருத்துவம், அடிப்படை சாலை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு போன்று செய்ய முடிவதை மட்டுமே நாங்கள் வாக்குறுதியாக அளிக்போம் இவற்றில் சமரசம் செய்ய மாட்டோம் என தெரிவித்தார். பின்னர் பிரச்சார வாகனத்தில் அரியலூர் புறப்பட்டு சென்றார்.

விஜய் பேசத் தொடங்கியது அவரது மைக்கில் பிரச்சனை ஏற்பட்டதால் அவர் பேசியது யாருக்கும் கேட்கவில்லை. பெரும் எதிர்பார்ப்புடன் காலை முதல் காத்திருந்த தொண்டர்கள் விஜய் பேசியது எதுவும் கேட்காதால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

விஜய் பிரச்சார பயணத்தால் திருச்சி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Leave A Reply

Your email address will not be published.