பெல் நிறுவனம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

0 245
Stalin trichy visit

திருச்சி,செப்.15  பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட
கழக செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவிப்பு !

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை, முன்னிட்டு பெல் பாய்லர் ஆலை கை சிலை அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து. தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” என்ற தலைப்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள உறுப்பினர்களை ஒன்றிணைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் துவாக்குடி நகர செயலாளரும் நகர் மன்ற தலைவருமான காயாம்பு, பெல் தொமுசவை சேர்ந்த கணேஷ் குமார், தீபன் பரமேஸ்வரன், உட்பட தொமுச நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.