திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ளது வெங்கடேசபுரம். இந்த கிராமத்தில் வசித்து வரும் 11ம் வகுப்பு மாணவியை அதே ஊரைச் சேர்ந்த புகழேந்தி(வயது 21) என்பவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தின் கீழ் புகழேந்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் வெங்கடேசபுரம் குறிஞ்சி தெருவைச் சேர்ந்தவர்கள் விஷ்ணு(21), பரத்(21), கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி(43) மற்றும் நீலகிரி சில்வர் எஸ்டேட்டை சேர்ந்த விஜயகுமார்(37) என்பவரை மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.