திருச்சியில் நடைபெறும் பணிகளை தெரிந்து கொள்ள புதிய இணையதளம்

0 492
Stalin trichy visit

“ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் திருச்சியில் நடைபெற்று வரும் பணிகள் தெரிந்து கொள்ள திருச்சி மாநகராட்சி புதிய இணையத்தளத்தை துவங்கி உள்ளது. www.smarttrichy.in என்கிற இணையதளத்தில் உள நுழைந்தால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த, தற்போது நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் இந்த இணையத்தில் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) மேப்பிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டியின் திட்டங்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்பு எண்கள் போன்ற முக்கிய அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது. அடுத்தபடியாக போக்குவரத்து மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பிற துறைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த இணையதளம் மேலும் மேம்படும் என்று திருச்சி மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.