தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் வாலிபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

0 297
Stalin trichy visit

திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் எல்லைக்குட்பட்ட முல்லைநகரில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் (35). இவர், கடந்த மாதம் 18-ந் தேதி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி கருமண்டபம், ஆல்பா நகர், 3-வது தெருவை சேர்ந்த ஆனந்தகுமார்(22), கருமண்டபம், ஜே.ஆர்.எஸ். நகரைச் சேர்ந்த குமரன் என்ற முத்தமிழ்குமரன் (32) ஆகியோர் பாலசுப்பிரமணியத்தை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.1,500-ஐ பறித்து கொண்டு சென்றனர்.

இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சல்ஆனந்தகுமார் மீது ஏற்கனவே, திருச்சி போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

எனவே, அவர் தொடர் குற்றம் செய்யும் எண்ணமுடையவர் என்பதால் ஓராண்டு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் முருகவேல், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தார். அதை அவர் ஏற்று, ஆனந்தகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.