வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இறந்த குழந்தையின் பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல்

0 120
Stalin trichy visit

திருச்சி, செப். 25 மழையினால் வீடு இடிந்து விழுந்த இறந்த 12 வயது குழந்தையின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல் கூறினார்.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17 ஆவது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய பகுதியில் கடந்த (6.9.25) அன்று பெய்த கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி சிவா மற்றும் சுகந்தி தம்பதியர்களின் மகள் 12 வயது கார்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் இறந்த குழந்தையின் இல்லத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில்  சென்றுஅவரது பெற்றோரை சந்தித்து இரங்கலை தெரிவித்து நிதியுதவி அளித்தார்.  இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், பகுதி செயலாளர் ஆர்.ஜி.பாபு, வட்டச் செயலாளர் மனோகர், மாமன்ற உறுப்பினர், மாவட்ட கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா, பிரபாகரன் (JE), புஷ்பராணி மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.