டிப்ளமோ பட்டதாரி மயங்கி விழுந்து சாவு

0 162
Stalin trichy visit

திருச்சி, அக் 4 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41) டிப்ளமோ முடித்துவிட்டு வணிகம் செய்து வந்தார். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது இந்த நிலையில் இவர் தன் உறவினருடன் திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று கார்த்திக் தான் இருக்கும் பகுதி அருகே மயங்கிய நிலையில் கிடந்தார் இதையடுத்து அவரை உடனடியாக ஆம்புலன்சில் மிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திக் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.