பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம்!

0 398
Stalin trichy visit

திருச்சி திருவரம்பூர் வேங்கூர் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் அப்பகுதியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு பதில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தருவதாக கூறி இதுவரை வீடுகட்டி தரவில்லை என குற்றம்சாட்டியும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனக் கூறியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தின் முன் பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து காவல்துறையினர் இங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மனு அளிக்க அழைத்துச் சென்றனர். மழை காலம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் தாங்கள் குடியிருப்பதற்கு பசுமை திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்க வேண்டும் என்றும் ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.