தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை

0 247
Stalin trichy visit

மணப்பாறை அருகே துவரங்குறிச்சி தீயணைப்பு துறை சார்பில் வாங்க கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “வாங்க கற்றுக்கொள்வோம்”என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு அறிவோம் உயிர்களை காப்போம் என்ற வாசகங்களுக்கு ஏற்ப துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையின் நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்
வேல்முருகன் தீயணைப்பு நிலையை வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறித்து விளக்க உரை ஆற்றினார்.

தொடர்ந்து தீயினால் எவ்வாறு தங்களை காப்பாற்றிக்கொள்வது என்றும் தீ பற்றினால் அதை எவ்வாறு அணைக்க வேண்டும் என்றும் செய்முறை விளக்கமும் செய்து காண்பித்தார். மேலும் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை தாங்களே காத்துக் கொள்வது என்ற செய்முறை விளக்கத்தையும் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் செய்து காண்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.