அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் கோவை ஓய்வூதியர்கள் பேரவையின் நிதியளிப்புக் கூட்டம்

0 561
Stalin trichy visit

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் கோவை ஓய்வூதியர்கள் பேரவையின் நிதியளிப்புக் கூட்டம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரையில் உள்ள தனியார் மஹாலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் கோவை ஓய்வூதியர்கள் பேரவையின் லால்குடி கிளையின் நிதியளிப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு திருநாவுக்கரசு தலைமை வகித்தார். சம்பத், இராதாகிருஷ்ணன், காமராஜ், கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பேரவை தலைவர் ராஜேந்திரன் பேசியதாவது..
கடந்த 9-ஆண்டுகளாக எவ்வித அகவிலைப்படி நமக்கு எவ்விதமான பணப்பலன்களில் உயர்வுகள் இல்லாமல், ஒளியற்ற தீபாவளியாகவே இருந்து வந்தது. இவ்வாண்டு,நமக்கு கோவை பேரவையின் சட்டப் போராட்டத்தினால், பஞ்சபடியில், 2016-க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு 102% உயர்வும், 2016-க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு 37% உயர்வும் கிடைத்துள்ளது.

எஞ்சி உள்ள 31% மற்றும் 13% பஞ்சபடியை வரும் 2026- ஜனவரி மாதத்திலிருந்து நாம் நிச்சயம் பெறுவோம். பணியில் உள்ளவர்களுக்கு பஞ்சபடி உயரும் போதெல்லாம் அவர்களுக்கு சமமாக நமக்கும் கிடைக்க கோவை பேரவை சட்ட போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. விரைவில் அதுவும் கைகூடும் என கூறினர்.

தலைவர் மணி பொருளாளர் தேவசிகாமணி முன்னாள் பொருளாளர் மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சின்னப்பன் வரவேற்புரையாற்றினார்.இறுதியாக கணேசன் நன்றியுரை ஆற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.