திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 555.00 கிராம் எடையுள்ள பேஸ்ட் வடிவ தங்கம் கைப்பற்றப்பட்டது.

இந்த தங்கத்தின் மதிப்பு 26.29 லட்சம் என கூறப்படுகிறது. அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியின் ஆசனவாயில் மறைக்கபட்ட 697.500 கிராம் எடையுள்ள ரூ.33.04 லட்சம் மீட்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 59 லட்சம் ஆகும். தங்கத்தை கடத்தி வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் சுங்கச் சட்டம் 1962ன் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.