திருச்சி பீமநகரை சேர்ந்தவர் கோபிகண்ணன்(35). வக்கீல். இவர் கடந்த மே மாதம் பீமநகரில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக செசன்ஸ் கோர்ட்டு போலீசார் பிரசாந்த் உள்பட 9 பேரை கைது செய்தனர். பிரசாந்த்தின் அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காட்டூரை சேர்ந்த தமிழை போலீசார் தேடி வந்தனர்.
ஆனால் அவரை சமீபத்தில் வேறு ஒரு வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பற்றி அறிந்த செசன்ஸ் கோர்ட்டு போலீசார் தமிழை கைது செய்ய கோர்ட்டில் பிடி வாரண்ட் கேட்டு மனுதாக்கல் செய்ததுடன், அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி கேட்டனர். இதற்காக திருச்சி சிறையில் இருந்து தமிழை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரிடம் ஒருநாள் மட்டும் விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.