செல்போனில் கேம் விளையாடிய போது மோதல்; 2 பேர் கைது

0 499
Stalin trichy visit

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் அடைக்கலராஜ்(57). இவர் திருச்சி-தஞ்சை ரோட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மதப்போதகராக உள்ளார். அடைக்கலராஜ் வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு 2 பேர் செல்போனில் கேம் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அவர்களிடம், செல்போனில் கேம் விளையாடுவது குறித்து பேசி கொண்டு இருந்ததாக தெரிகிறது.

அந்தசமயம் அங்கு வந்த சதீஷ் அடைக்கலராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் சதீஷ் உள்பட 3 வாலிபர்களும் சேர்ந்து அடைக்கலராஜை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லாமேரி அங்கு சென்று அவரை தாக்கியதாக கோபி, சதீஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.