கொத்தடிமை தொழிலாளர்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 636
Stalin trichy visit

மாவட்ட சட்டப்பணிகள் ஆனைக்குழுவும், மகளிர்மேம்பாட்டுத்திட்டமையமும் (WDPS) நிறுவனமும் இணைந்து கொத்தடிமை தொழிலாளர்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லணை திருவளர் சோலை செங்கல் சூலையிலும், லால்குடி வட்டங்கள் பணிகள் ஆனைக்குழு சார்பில் நடராஜபுரத்திலும், மணப்பாறை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வேங்கைகறிச்சி கிராமத்தில் செங்கல் சூலையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஜமுனா, சட்டத்தன்னார்வலர்கள், அக்னி சிறகுகள் இயக்குனர் மகேந்திரன், WDPS இயக்குனர் சீதாலெட்சுமி மற்றும் குணசேகரன் தன்னார்வலர்கள் கலைவாணி, சர்மிளா, அபர்ணி, ரஞ்சிதா, சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.