மாமுண்டி‌ ஆற்றின்‌ குறுக்கே ரூ.5.42 கோடி மதிப்பில் புதியமேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

0 104
Stalin trichy visit

திருச்சி, நவ.3  மணப்பாறை அருகே மாமுண்டி‌ ஆற்றின்‌ குறுக்கே ரூ.5.27 கோடியில் புதிதாக மேம்பாலம். அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கம்.‌ மழைகாலங்களில் தரைப்பாலத்தில் தண்ணீரில் தத்தளித்த 25 கிராமமக்கள் நிம்மதி நிம்மதி அடைந்தனர். மேலும் ஜெயலலிதா ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவித்தும் நிறைவேற்றாததை தற்போது நிறைவேற்றித் தந்த தமிழக அரசுக்கு நன்றி  தெரிவித்தனர். 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சமுத்திரம் செல்லும் வழியில் மாமுண்டி ஆறு உள்ளது. சமுத்திரம் மட்டுமல்லாது காந்திநகர், சின்ன சமுத்திரம், சித்தகுடிப்பட்டி, பொருவாய், தாதநாயக்கன்பட்டி, ஜேபி நகர், மருள்நாயக்கன்பட்டி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலம் வழியாகச் செல்லவேண்டும். மேலும் கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் தோகைமலைப் பகுதியை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் பிரதான சாலையாகவும் இது உள்ளதால் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும்.

இந்நிலையில் மழைகாலங்களில் மணப்பாறை பகுதியில் பெய்யும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி மாமுண்டி ஆற்றில் வெள்ளநீர் செல்லும் காலங்களில் சமுத்திரம் பகுதியில் மாமுண்டி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை கடந்தும் நீர் செல்லும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், விவசாயிகள், விராலிமலை தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அவசர தேவைக்கு செல்வோர் என பல ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் ஆபத்தின் உச்சம் என தெரிந்தும் வேறு வழியின்றி அதிவேகமாக செல்லும் நீரில் உயிரை பணயம் வைத்து அபாயகரமான முறையில் கடந்து செல்ல வேண்டிய நிர்பந்த சூழ்நிலைக்கும் அல்லது 7 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இப்பகுதியில் பாலம் அமைத்து தந்திடவேண்டும் என்ற கோரிக்கை நீண்டபல ஆண்டுகளாகவே நீடித்தாலும் அது கோரிக்கையாகவே இருந்து வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தபோது தனது தொகுதிக்குட்பட்ட சமுத்திரத்தில் உள்ள மாமுண்டி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்தும் பாலம்கட்டப்பட வில்லை.
இந்நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சமுத்திரத்தில் மேம்பாலம் கட்டப்படும் என திமுக வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது சமுத்திரத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு ரூ. 5.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு‌ அதற்கான பணிகள் துவங்குவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார். விழாவின் போது சமுத்திரம் மற்றும்‌ அதனைச்சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமமக்கள் திரண்டு வந்து சட்டமன்ற உறுப்பினருக்கு சால்வை அணிவித்து தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர்.

சுமார்‌ 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது திமுக அரசால்தான் தங்களது கோரிக்கை நிறைவேறிதாகக்கூறி தமிழக அரசுக்கும், முதல்வருக்கும்‌, ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் நிகழ்ச்சியில் மணப்பாறை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சமுத்திரம் கணேஷ், செல்வராஜ், திமுக நிர்வாகிகள் பாண்டியன், சந்திரகுமார், ராமசாமி, செல்வராஜ், முரளி, ராஜேந்திரன், காமராஜ், பழனிச்சாமி, கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.