மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

0 114
Stalin trichy visit

திருச்சி, நவ.3  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்தூராம்பட்டி அருகே உள்ள பேச்சங்காம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (49) மின்வாரியத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவர்வெள்ளிக்கிழமை காலை அதே பகுதியில் உள்ள ஒரு மின்மாற்றியில் பழுது நீக்க ( ப்யூஸ் போட)மேலே ஏறிய போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து மின்மாற்றியில் தொங்கிய அவரின் உடலை கீழே இறக்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய ஊழியர் மின்மாற்றியில் பழுது நீக்க சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.