மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி, நவ.6 திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வித் திட்ட வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது,
முகாமில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமிற்கு தொட்டியம் வட்டார கல்வி அலுவலர் கார்த்திக் தலைமை வகித்தார், மாற்றுத்திறனாளி நல மாவட்ட உதவி அலுவலர் ரமேஷ், வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்,
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரபிக் முகாமை பார்வையிட்டார், முகாமில் ஒன்று முதல் 18 வயதுடைய குழந்தைகளும் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர், முகாமில் பார்வை திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு, செவித்திறன் குறைபாடு, உடல் இயக்க குறைபாடு, கண் பரிசோதனை, காது மூக்கு தொண்டை பரிசோதனை ஆகியவை பரிசோதிக்கப்பட்டது, முகாம் ஏற்பாடுகளை வட்டார வள மைய பயிற்றுநர்கள் செய்திருந்தனர், முகாமில் 120க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.