அமைச்சர் கே.என்.நேரு பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளாமை அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்
திருச்சி, நவ.10 நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பிறந்த நாளை முன்னிட்டு
வெள்ளாமை அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் எடத்தெரு பகுதி சூசையப்பர் ஆலய வளாகத்தில் 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மண்டி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் வெள்ளாமை இயக்கத்தின் நிதி குழு செயலாளர் அந்தோணி, அறக்கட்டளை நிறுவனர் பெலிக்ஸ் ஆனந்த், அறங்காவலர் ஜான், துணை நிதி குழு செயலாளர் மரியஅகில ராஜ், ஆசிரியர் கான்சன், வரகனேரி சர்தார். நத்தர்ஷா தர்கா முகமது ஷரீஃப், அலேக்ஸ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் பொது மருத்துவ முகாம், ரத்த சர்க்கரை அளவு கண்டுபிடித்தல்,ரத்த அழுத்தம் சரி பார்த்தல்.சுருள் படம்,நுரையீரல் பரிசோதனை,எடை சரிபார்த்தல் உயரம் சரிபார்த்தல் உள்ளிட்ட மருத்துவ ஆலோசனைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்