மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று மாட்டு வண்டிகளை விரட்டிப் பிடித்த வி.ஏ.ஓ

0 14
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 8  மணப்பாறை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று மாட்டு வண்டிகளை விரட்டிப் பிடித்த விஏஓ.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சித்தாநத்தம் பகுதியில் உள்ள அரியாற்றில் இரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து சித்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சோலைராஜ் இன்று காலை தனது கிராம உதவியாளருடன் சென்று கரிச்சாம்பட்டி பகுதியில் ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த மூன்று மாட்டு வண்டிகளை பிடிக்க முற்பட்டபோது வண்டியை மணலுடன் அங்கேயே விட்டுவிட்டு மாடுகளுடன் மணல் திருட்டில் ஈடுபட்ட வண்டி உரிமையாளர்கள் ஓடிவிட்டனர்.

பின்னர் வி.ஏ.ஓ., வேறு டிராக்டர் மூலம் மாட்டு வண்டிகளை ஆற்றில் இருந்து எடுத்து வந்து சரக்கு ஆட்டோவில் கட்டி இழுத்துவந்து மணப்பாறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் விஏஓ ஆய்வில் ஆற்றின் கரையையும் சேதப்படுத்தி மணல் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.