மணிகண்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில்  கூட்டுக்குடிநீர் திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 152
Stalin trichy visit

திருச்சி, நவ.13 திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.119.92 கோடி மதிப்பீட்டில் மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 174 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.எஸ்.சமீரன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளர் என்.ஜெயக்குமார், நிருவாக பொறியாளர்கள் பரிமளாதேவி, ராஜகோபால், மணிகண்டம் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கமலம் கருப்பையா, அந்தநல்லூர் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ச.துரைஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,

Leave A Reply

Your email address will not be published.