பணியின் போது உயிரிழந்த பெல் ஒப்பந்தத் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்

0 11
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 10 திருச்சி திருவெறும்பூர் அருகே  பெல் நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த பணியாளர்களாகவும் பணியாற்றிய வருகின்றனர் இந்த நிலையில் செங்கிப்பட்டி ராயமுண்டான் பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த சார்லஸ் (55) என்பவர் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக 30 ஆண்டுகள் வேலை பார்த்து வந்ததாகவும் இந்த நிலையில் ஸ்டோர் உதவியாளராக தற்பொழுது வேலை பார்த்து வந்த நிலையில் திடீரென நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனே சக ஊழியர்கள் சார்லசை பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பறிசோதித்த மருத்துவர்கள் சார்லஸ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இறந்த சார்லஸ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இறந்து போன சார்லஸின் குடும்பத்தில் ஒருவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும்.அதேபோல் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ 20 லட்சம்வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெல் மருத்துவமனை முன்புநேற்று இரவு நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களிடம் பெல்நிறுவன அதிகாரிகள் மற்றும் பெல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தொடர்ந்து இன்று காலை திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெல் பயிற்சி மையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருவெறும்பூர் பொறுப்பு டிஎஸ்பி சந்தியா டி சி பி அவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காவல்துறை பெல் நிர்வாக அதிகாரிகள் மற்றும் திருவெறும்பூர் தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர் இதில் இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்குவது என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்றுக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.