துறையூர் அருகே புதிய ஆழ்குழாய் கிணறு – குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் : அருண்நேரு எம்.பி. தொடங்கி வைத்தார்
திருச்சி, நவ.28 துறையூர் அருகே கண்ணனூரில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எம்பி அருண் நேரு மாணவர்களின் பயன்பாட்டிற்காகதொடங்கி வைத்தார் !
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்