தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி, டிச.10- திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நித்யாசேனா (வயது 43) இவரும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சார்லஸ் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் சார்லஸ் கடந்த 8ந் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.