மாருதி சிமெண்ட் ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை
திருச்சியில் மாருதி சிமெண்ட் உரிமையாளர் வீடு மற்றும் சிமெண்ட் ஆலையில் வருமான வரி துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்டோர் 7 மணி நேரத்திற்கு மேலாக அதிரடி சோதனை.
காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுப்பிரமணியன் இவர் திருச்சி மாம்பழச்சாலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் .
சுப்பிரமணியனுக்கு சொந்தமாக திருச்சி சமயபுரம் அடுத்து தத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சாபுதூர் பகுதியில் கரியமாணிக்கம் சாலையில் மாருதி சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது தொழிற்சாலையை சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் இருவரும் நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சாலையில் முறைகேடாக வரி போலி பில்கள் கொண்டு சிமெண்ட் விற்பனை செய்து வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் திருச்சி மாம்பழச்சாலை பெரியார் நகரில் உள்ள வீடு மற்றும் சமயபுரம் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலையிலும் 30 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 11 மணியிலிருந்து 6 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுப்பிரமணியின் சொந்த ஊரான காரைக்குடியில் உள்ள அவரது வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் முடிவில் சில முக்கிய ஆதாரங்கள் கிடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.