தீக்குளித்து உயிர் நீத்த முருக பக்தர் திருவுருவ படத்திற்கு மோட்சதீபமேற்றி அஞ்சலி

0 201
Stalin trichy visit

திருச்சி, டிச.20  தீக்குளித்து உயிர் நீத்த முருக பக்தர் திருவுருவ படத்திற்கு  இந்து முன்னணியினர் மோட்சதீபமேற்றி அஞ்சலி.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோவில் எதிரில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றாததை கண்டித்து தீக்குளித்து உயிர் நீத்த முருக பக்தர் திருவுருவ படத்திற்கு இந்து முன்னணியினர் மோட்சதீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றாததை கண்டித்து தீக்குளித்து உயிர் நீத்த முருக பக்தர் பூர்ண சந்திரன் திருவுருவப்படத்திற்கு திருப்பட்டூர் கிளை இந்துமுன்னணி சார்பாக இந்து முன்னணியின் திருச்சி கோட்டா பொதுச் செயலாளர் குணா தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் விக்னேஷ் பிரசாத் முன்னிலையில் திருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில் எதிரில் நேற்று இரவு மோட்சதீபமேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.