ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து -1 ஆம் நாள் : பச்சை பட்டு உடுத்தி பெருமாள் புறப்பாடு

0 159
Stalin trichy visit

திருச்சி, டிச.20  திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா – திருமொழி திருநாள், பச்சை பட்டு உடுத்தி பெருமாள் புறப்பாடு

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் இன்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார்.

நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 1 ஆம் நாளில்

கல் இழைத்த நேர் கிரீடம் சாற்றி,சிறிய நெற்றி சுட்டி பதக்கம் அதில் சாற்றி,
திருமார்பில் – பங்குனி உத்திர பதக்கம்,அதன் மேலே அழகிய மணவாள பதக்கம் – ஸ்ரீ ரங்கநாச்சியார் பதக்கம், வைரக்கல் ரங்கூன் அட்டிகை, சந்திர ஹாரம்,சிகப்பு கல் இழைத்த அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை; அரைச் சலங்கை,8 வட முத்து மாலை; வைரக்கல் அபய ஹஸ்தம் – அதில் தொங்கல் பதக்கம் அணிந்து பச்சை பட்டு உடுத்தி சேவை சாதித்தார்.. விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு வரும் டிசம்பர் 30ம் தேசி நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.